Tuesday, December 20, 2022

உயர்ந்த எண்ணம்

 பெரிய கற்கள்



             வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப்பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர். 

            ''மாணவர்களே, இன்று நாம் செய்முறைவிளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.''

           வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக்கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச்செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீதுவைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்துவரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன்மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‌‎ன்றாகஎடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.

      ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?''

     அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்..ஸார்!''

     சலனமில்லாமல் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன்சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார்.அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போடஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில்ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட,ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்புசெய்தன.

     ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''

    வகுப்பறையில் நிசப்தம். ஒரு மாணவர் மட்டும்''அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது'' எ‎ன்றார்.

    மெல்லிய பு‎ன்னகையுடன் ''நல்லது'' எ‎ன்றபேராசிரியர், பி‎ன் ஒரு வாளி நிறைய ஆற்றுமணலைக் கொண்டு வரச் செய்தார். மணலைகொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடப் போட,கிடைத்த இடைவெளிகளில் மணல் ஆக்கிரமிப்புசெய்ய ஆரம்பித்தது. ஜாடியைக் குலுக்கி விட, மேலும்மணலை அள்ளிப் போட முடிந்தது.

          ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக்கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''

         இப்பொழுது, வகுப்பறை முழுவதும் கோரஸாக, ''நிச்சயமாக ‏இல்லை!'' 

சிரித்த பேராசிரியர் ''நல்லது'' எ‎ன்றவாறே, ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார்.தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக்கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.

          ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துச்பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர். ''ஜாடி நிறைந்துவிட்டதா எ‎ன்று ‏இப்போது நான் கேட்கப்போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டபாடம் எ‎ன்ன?''

         ஒரு மாணவர் எழுந்தார். ''நமது நேர நிர்வாகம்எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள்செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்துகொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள்மேலும் சில சிறிய வேலைகளையும் முடிக்க முடியும்''

       ''இல்லை.. அதுவல்ல பாடம்'' பேராசிரியர்பதிலுரைத்தார்:

       ''பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள்போடாவிடில், பி‎ன்னர் எப்போதுமே அவற்றை நீங்கள்போட முடியாது; ஜல்லிகளும் மணற்துகள்களும்அடைத்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையை ஒருஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பெரியகற்கள் எ‎ன்பவை இ‏ங்கே உங்கள்அ‎ன்பிற்குரியவர்களை, உங்கள் த‎ன்னம்பிக்கையை,உங்கள் கல்வியை, உங்கள் எதிர்காலக் கனவுகளை,குறிக்கோள்களைக் குறிக்கி‎ன்றன. இவற்றைஅந்தந்தக் கால நேரங்களில் சரியாகஉள்ளிடாவிட்டால் பி‎ன்னர் அவற்றை உள்ளிடமுடியாது. விளைவு?''


''ஆகவே, ‏இன்று வீட்டுக்குச் செல்லுங்கள். ந‎ன்றாகத்தூங்குங்கள். காலையில் எழுந்து உங்களை நீங்களேகேட்டுக் கொள்ளுங்கள், 'பெரிய கற்கள் என்பவைஎ‎ன் வாழ்க்கையில் யாவை' எ‎ன்று''

Monday, December 19, 2022

தன்னம்பிக்கை தத்துவம்

 ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,


தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......

*

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

*

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

*

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

*

ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

*

எது அந்த தவளையை கொன்றது...?

*

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். 

*

ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......

*

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.

*

ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

*

மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

*

உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று. 

*

"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...


 👉🏿விழுந்தால் அழாதே . . .

எழுந்திரு 👈🏿


           🗣

👉🏿தோற்றால் புலம்பாதே . . .

போராடு 👈🏿


             🗣

👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .

மன்னித்துவிடு 👈🏿


              🗣

👉🏿தள்ளினால் தளராதே . . .

துள்ளியெழு 👈🏿


               🗣

👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .

நிதானமாய் யோசி👈🏿


                🗣

👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .

எதிர்த்து நில் 👈🏿


           🗣

👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .

நம்பிக்கை வை 👈🏿


              🗣

 👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .

கலங்காமலிரு 👈🏿


              🗣

👉🏿 உதாசீனப்படுத்தினால் உளறாதே . .

உயர்ந்து காட்டு 👈🏿


           🗣

👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .

அடைந்து காட்டு 👈🏿


           🗣

👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿


              🗣

👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿


 

💐💐💐💐💐💐💐💐

💐உன்னால் முடியும் .💐


💐உயர முடியும் . . .

  💐


              

💐உதவ முடியும் . . .

  💐


💐💐💐💐💐💐💐💐

⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

 

❇❇❇❇❇❇❇

👉🏿உன்னை உயர்த்த நீ தான் 👈🏿. . . ⚜நம்பு⚜ . .


✳✳✳✳✳✳✳✳

👉🏿 உன்னை மாற்ற நீ தான் 👈🏿. . .👉🏿 முடிவெடு👈🏿 . . .


                👤

👉🏿நீயே பாறை👈🏿👉🏿.நீயே உளி . 👈🏿. .


             👤

👉🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈🏿. . .


                 👤

👉🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈🏿. . .

                     👤

👉🏿நீயே வளர்வாய் 👈🏿. 👉🏿நீயே அனுபவிப்பாய் 👈🏿. . .


                  👤

👉🏿நீயே நதி👈🏿 . . .👉🏿 நீயே ஓடு👈🏿 . . .


                   👤

👉🏿நீயே வழி👈🏿 . . .👉🏿 நீயே பயணி👈🏿 . . .


                  👤

👉🏿நீயே பலம் 👈🏿. . . 👉🏿நீயே சக்தி 👈🏿. . .


                    👤

🌸நீயே ஜெயிப்பாய் 🌸


💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸

    . 🙏🙏🙏

மாணவர்களின் விமர்சனம்

 1×9=7

2×9=18

3×9=27

4×9=36

5×9=45

6×9=54

7×9=63

8×9=72

9×9=81

10×9=90


மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. காரணம் முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது. மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது. 


சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்..


நான் முதல் சமன்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன். இவ்வாறு எழுதியதற்கு ஒரு காரணமுண்டு. இதன் மூலம் உங்களுக்கொரு படிப்பினையைக் கற்றுத் தருவதே அதன் நோக்கம். 


இந்த உலகம் உங்களை எவ்வாறு மதிப்பிடுகின்றது என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள். 


நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக எழுதியிருக்கின்றேன். அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்ட முன்வரவில்லை. ஆனால் நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விடயத்தைக் காரணங்காட்டி அனைவரும் சிரித்து கேலி செய்து விட்டீர்கள்.



நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும் இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருமித்து நின்று மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்.. 


இவைகளைக்கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்து சிரித்தவர்கள், உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.


💠💠💠💠💠💠💠💠

அன்பான காதல் கதை

 ♥கணவன் மனைவி ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்காந்தார்கள்...


♥என்னங்க உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்போல இருகு கேட்கவா....

♥இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

♥இல்ல ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய குட்டிப்போறீங்க.. பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க..... திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க.... அதான்...
என்று இளுத்தால்...

♥ஒன்னுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்

♥மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

♥என்னத்த சொல்ல..

♥ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா .. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

♥போடி லூசு.. அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லனும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

♥என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

♥அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

♥என்னங்க இது ..

♥படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான். அவள் படிக்க தொடங்கினாள் ... அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

#அன்புள்ள #மகனுக்கு,

♥கண்டிப்பா என்னைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன். உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன். ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி. அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காதா.

♥உங்கப்பாவ கல்யாணம் பண்னும்போது நான் காலேஜ் லெக்சரர். அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது. இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரும் அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ... வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன். உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசினு...

♥கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்கை. அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான். உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன். அவர் அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார். நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை. நாம தான் விளையாடுவோம். அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருபேன்.

♥ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க.. அதுல பாதி பொய் இருக்கும்.. அதெல்லம் உங்க கற்பனைனு நினைச்சு ரசிச்சேன். அப்புறம் நீங்க வளர்ந்தீங்க.. அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு. ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு. இப்ப வெளியே போகனும்... இப்படி வெளியே போகணும்னு.. ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

♥காத்திட்டு இருப்பேன். நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்.... நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

♥இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு. அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுங்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன். காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

♥அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்... இப்ப அவ எப்படி இருக்கானு கூட அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்.... ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

♥உனக்கு சொல்லவே வேண்டாம்... அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே நீ ரொம்ப பிசியாகிட்ட.. நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்... சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

♥உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு.. நான் காத்திட்டு இருந்தேன். கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு.. ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு... எண்ட பேச அவருக்கு விசயமே இல்லை... பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு. ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல... பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

♥இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது. நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது அங்க நிறைய அம்மாக்கள் பார்ப்பேன்.. அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் தான். உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்... அதுல இன்னைகே வாழ்ந்துடனும்... அடுத்த ஆறு நாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன் .இன்னைக்கு ஒரு நாள் தானேனே புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள் பார்த்தேன். இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரிய ம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது... உங்களுக்கு ஒரு நாள் தானேனு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

♥இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்கியா... என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல.. ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல அதான் உண்ட்டசொல்றே.. நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல... சொன்னாலும் உன்னால கேட்க முடியாது.. அதனால தான் இப்ப சொல்றேன். உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா... காத்திட்டு இருக்காங்க...

♥உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது.. ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு. அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்குலுக்கு தெரியாத அளவு அவர் பிசி.... அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல.. அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..பாத்தியா வாழ்க்கைய ? 

♥நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துடாதா ? உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடதா... இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட. நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லபோனா நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்.. அத கொஞ்சம் குறைச்சிகோ.. சீக்கிரம் வீட்டுக்கு வா. பொண்டாடிகிட்ட புள்ளைககிட்ட பேசு... அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு.... ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும் ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா ?

♥செய்வேனு நம்புறேன். ஏன்னா எண்ட நல்லா பேசின பையன் தானே நீ... உன் மனைவி மகள விட்டுடவா போற...

♥கடிதத்தை படித்து முடிந்தாள். அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது. நிமிர்ந்து அவனை பார்த்தாள்.... இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது. அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்..... 

.நான் தான்மா
..... 
ஏன் சும்மா பேசக்கூடாதா
... 
என்ன செய்ற...
....
♥அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள். ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .

♥அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான். இனிமே அப்படித்தான்.. இனி அங்கே அன்பில் காத்திருக்க அவசியமில்லை


.

படித்ததில் பிடித்தது

 Tst:

*"நான் குழந்தையாக* இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் *அப்பா."*


அவரை என் *அம்மாவுக்கும்* பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்.


அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.


நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.


என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.


அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது. 


 அவர் ஒரு அற்புதமான

கதை சொல்லி,

அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.


காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார்.


அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.


விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.

அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..

சிந்திக்கவும் வைப்பார்.


அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார்.

ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார். 


 நாட்கள் விரைந்தது .


நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. *அம்மாவுக்கு* இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.


அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை.

*அப்பா* அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.


தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார்.


நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.


எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.

அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார்.


சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார்.


செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது. 


எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .


நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது. 


 எனது *தாய் தந்தையர்* பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார்.


நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .


நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை. 


 இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம்.


இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.


நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.


அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்?


அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள்.


கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது.


இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.


சொல்கிறேன் கேளுங்கள்.


அவரை நாங்கள் *"டிவி"* என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது.


அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.

அவருடைய மனைவியின் பெயர் *கம்ப்யூட்டர்.*


இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் *கைபேசி*

 இவர்களை குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!

 


 🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

அழகுக்கு மதிப்பு இல்லை

 Tst:

அழகான இளம்பெண்ணுக்கு முகேஷ்_அம்பானி சொன்ன பதில்!


பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ‘பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ‘என் வயது 25 நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்றார். இந்த பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது,


‘உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால், இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகும் ஒன்று. மறுபுறம் பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்து கொண்டே போகும் ஒன்று. பொருளாதார பார்வையில் இதனைக் கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்து கொள்ள மாட்டார். எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதையும் மறந்து விட்டு, நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்’ என்றார்

மதிப்பை கற்றுக்கொள்

 Tst:

-----No joke -------

🌐 காட்டிலிருந்து 🐩 புலி ஒன்று வழி தவறி ஒரு 🏢 கார்ப்பரேட்

கம்பெனியின் 🚽 ரெஸ்ட் ரூம்புக்குள்

நுழைந்துவிட்டது. 


😿 பதட்டத்துடன் இருந்த

அந்த புலி டாய்லெட்டின் ஓர் 🌑 இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.


👉 மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு 🍜 பசி எடுத்தது.


👉 நான்காவது நாள் பசி தாங்க முடியாமல்

🚽 ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த

🚶 ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.

அவர், அந்த நிறுவனத்தின்

👔 அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். 


👆 அவர் காணாமல் போனது அலுவலகத்தில்

யாருக்கும் தெரியாது,

யாருமே கண்டு கொள்ளவில்லை.


✌ இரண்டு நாட்கள் கழித்து, இன்னும்

ஒரு 🏃 நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.


👆 அவர், அந்த நிறுவனத்தின் 👓 ஜெனரல் மேனேஜர். 


👆 அவரையும் யாரும்

தேடவில்லை, கண்டுகொள்ளவும்

இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில்

இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்! 😄😃😀). 


👉 இதனால் குளிர்விட்டுப் போன புலி,

😤 நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது.


👉 அடுத்த நாள் வழக்கம்போல்

ஒரு 👳 நபரை அடித்துக் கொன்றது.

அவர் அந்த அலுவலகத்தின் பியூன்.


அலுவலக ஊழியர்களுக்கு ☕ காபி வாங்குவதற்காக

பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.


🕚 சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற

பியூனைக் காணவில்லையே என்று மொத்த

அலுவலகமும்

சல்லடை போட்டு தேடியது.


⏰ நெடுநேர

தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில்

உயிரிழந்து கிடந்த. பியூனையும்,

அந்த ஆட்கொல்லி புலியையும்

கண்டுபிடிக்கிறார்கள். 


❎ புலி பிடிபடுகிறது ❎


          📝 பாடம் 📝


👆 உங்கள் மீதான

🙌 மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் 👔 பதவியோ,

💰 வசதி வாய்ப்போ அல்ல.


👆 நீங்கள்

👉 👈 மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக

இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது...


 நான் படித்ததில்

    மனதில் பதிந்தது..